மகாராஷ்டிராவில் வார்காரிஸ் பக்தர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுவாமி விதோபாதிருத்தலம் கோவிலுக்குள் 75 பேருக்கு பதில் அதிகமானோர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிகழ்வால் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரிடன் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபாதிருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரிஸ் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்த முறை 75 பேர் மட்டும் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் வாக்குவாதமும்,தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இப்படிம காராஷ்டிராவில் வார்காரிஸ் பக்தர்கள் மீது தடியடி நடத்துவது, மாநிலத்தில் இதுவே முதல் முறை என குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர் பலர்.
இந்த சம்பவத்திற்காக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் உட்பட பலரும் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்கூறுகையில் ''ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடிஅவிழ்ந்தது. எனக் குறிப்பிட்டுள்ளார். ''ஸ்ரீ ஷேத்ரா ஆலந்தியில் வார்காரி பக்தர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விதம் மிகவும் மூர்க்கத்தனமானது. மகான் ஞானேஸ்வர் மகாராஜ் முன்னிலையில் வார்காரிஸ்களை அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்துள்ளார்.
வார்காரிஸ் பக்தர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டது, ஆனால் எந்த ஒரு தடியடியும் இல்லை என்று ஒரு மூத்த அதிகாரிகள் கூறிஉள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள், வார்க்காரிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறி, உயர்மட்ட விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்
.