வாக்குத் தவறிய வாஜ்பாய், அத்வானி பரபரப்பு புத்தகம் சொல்லும் உண்மைகள்!
“இந்தியாவின் முக்கிய புள்ளி: 7 ரேஸ் கோர்ஸ் ரோடு பார்வையில் இருந்து“ இந்தத் தலைப்பில் அண்மையில் ஒரு புத்தகம் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பூட்டி இருக்கிறது.
யார் எழுதிய புத்தகம் இது? அப்படி என்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? என்கிறீர்களா? எஸ். நரேந்திரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
7 ரேஸ் கோர்ஸ் ரோடு என்பது இந்தியப் பிரதமர் வசிக்கும் பங்களாவின் முகவரி ஆயிற்றே? நரேந்திரா என்ற அதிகாரிக்கும், பிரதமர் பங்களாவுக்கும் என்ன சமந்தம்?
பி.வி. நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமராக இருந்த சமயம், அவருடைய தகவல் ஆலோசகராக இருந்தவர்தான் நரேந்திரா. அவர், நரசிம்ம ராவுடனான தனது அனுபவங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். அதை பல சுவாரசியமான, சர்ச்சக்குரிய, பரபரப்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுதான் பரபரப்பான ஹர்ஷத் மேத்தா தொடர்பான பங்குப் பத்திர ஊழல் வெளியாகி நாட்டையே உலுக்கியது. “தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களை ஹர்ஷத் மேத்தாவுடன் தொடர்புப் படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, அவர்கள் மீது உடனடியாக நடவைக்கைகள் எடுக்க மிகவும் தயங்கினார் ராவ் என்று குறிப்பிடுகிறார் நரேந்திரா.
நரசிம்ம ராவின் ஓராண்டு ஆட்சியின் நிரைவினை ஒட்டி, அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்புக்கு முன்பாக, ராவை உட்கார வைத்து, அவரது சக அமைச்சர்கள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் இருவரும் உடனிருக்க, ஒரு பத்திரிகையாளர் போல தான் பல்வேறு தர்ம சங்கடமான கேள்விகளையும் நரசிம்ம ராவிடம் கேட்டு, அவரை பத்திரிகையாளர் சந்திப்புக்குத் தயார் செய்ததை இந்தப் புத்தகஹ்ட்தில் விவரித்திருக்கிறார் நரேந்திரா.
பாபர் மசூதி தகர்ப்பு பற்றிக் குறிப்பிடுகையில், நரேந்திரா “வாஜ்பாய், அத்வானி இருவரும் “பாபர் மசூதி தகர்க்கப்படாது” என்று ராவிடம் வாக்குறுதி அளித்தபோதிலும், அதனைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகக் கூறி
வருத்தப்பட்டார் நரசிம்ம ராவ்” என்று எழுதி உள்ளார். மேலும், பா.ஜ.கவுடன் சேர்ந்து பாபர் மசூதித் தகர்ப்புக்கு ராவ் உடந்தையாக இருந்தார் என்ற ஒரு சிலரது குற்றச்சாட்டினையும் நரேந்திரா இந்தப் புத்தகத்தில் வன்மையாக மறுத்துள்ளார்.