டெல்டா பகுதிகளுக்கு ஏலத்தில் இருந்து விலக்கு! மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட் !

டெல்டா பகுதிகளுக்கு ஏலத்தில் இருந்து விலக்கு! மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட் !

டெல்டா பகுதிகளுக்கு ஏலத்தில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளதாக நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையினை ஏற்று

, தஞ்சாவூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளுக்கு ஏலத்தில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளதாக நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஏழாம் சுற்று ஏல அறிவிப்பில் இருந்து தமிழ்நாட்டின் மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பைக் காக்கவும், தமிழ் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து அந்த குறிப்பிட்ட 3 சுரங்கங்களை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளேன்` என்று டிவீட் செய்துள்ளார்.

இந்த டிவீட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரி டிவீட் செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துனை நிற்பவர் பிரதமர் மோடி. தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com