அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு!

சென்னை முகப்பேரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் காமராஜுக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது.

அதேபோல் மன்னார்குடி காமராஜின் உறவினரும் அதிமுக நகர செயலாளருமான ஆர்.ஜி.குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், மன்னார்குடியில் காமராஜின் வழக்கறிஞர் உதயகுமார், தஞ்சையில் உள்ள காமராஜின் சம்பந்தி மோகன் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

-இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவித்ததாவது;

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன் நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ரூ. 58.84 கோடி மதிப்பில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com