விரைவில் சசிகலாவை சந்திப்பேன், வாய்ப்பு கிடைத்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ்ஸின் அதிரடி பதில்கள்!

விரைவில் சசிகலாவை சந்திப்பேன், வாய்ப்பு கிடைத்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ்ஸின் அதிரடி பதில்கள்!

கடந்த மாதம், ஓபிஎஸ் மற்றும் அவரது சில உதவியாளர்களை நீக்கிய நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தொடர அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

வாய்ப்பு கிடைத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முன்னாள் முதல்வரும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தெரிவித்தார். விரைவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலாவையும் சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் ஓபிஎஸ் பேசுகையில், தினகரனுடன் இணைவது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது, அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஓபிஎஸ், “தினகரனுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார். தொடர்ந்தூ, சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு, விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் பதில் கூறினார்.

மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் அது குறித்து பேசுவேன் என்று ஓபிஎஸ் கூறினார்.

மேலும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கேட்டதற்கு, எடப்பாடியின் நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமாகவே இருப்பது அனைவருக்கும் தெரியும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com