இன்று லோக்சபா தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு!

Loksabha Election 2024
Loksabha Election

லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்று 4ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், ஆண் வாக்காளர்கள் 66.9 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 23.86 சதவீதம் பேர் ஆவர்.

இதனையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் நடைபெற்றது.

குஜராத்தில் 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்திராவில் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் வங்கத்தில் தலா 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்தவகையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்திராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Loksabha Election 2024

1.92 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 17.70 கோடி பேரில் 8.73 கோடி பேர் பெண்கள். இன்றுடன் லோக்சபா தேர்தலின் நான்கு கட்டங்கள் முடிவடையும் நிலையில் மொத்தம் 543-ல் 379 மக்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. 4-ம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் 4,500 தமிழக போலீஸார், 1,614 முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.06 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com