

வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைகள் மற்றும் கூட்டணி என அரசியல் களம் சுறுசுறுப்பாக மாறி வரும் வேளையில் மக்களும் அரசு தரப்பில் இருந்து வரும் சலுகைகளை மகிழ்வுடன் எதிர்நோக்கியுள்ளனர் எனலாம்.
இந்நிலையில் வரும் 2026 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டை கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 3,000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே மகிழ்ச்சி தந்துள்ளது. சென்ற வருடம் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் மட்டுமே இருந்ததுடன் தொகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாக உள்ளது. இப் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் 2021 பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது முதல் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.
இந்த பரிசுத்தொகுப்பில் சுமார் 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொருள்களும் வழங்கப்பட உள்ளது மேலும் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் என்கின்றனர்.
இருப்பினும் 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொங்கல் பரிசுத் தொகை (Pongal Gift Package) குறித்து இணையத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அரசுச் செய்தி வெளியிடப்படவில்லை; ஆனால் பல சமீபத்திய தகவல்கள், ஊடகங்கள் மற்றும் ஊகங்கள் (reports & speculations) வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ செய்தி எதிர்பார்க்கப்படுகிறது
துவக்த்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டி அதன் பின் நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் 2026ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்களை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனவரி 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இன்னொரு முக்கிய விஷயம். "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் வெளியூரில் பொருட்கள் வாங்கினாலும் பொங்கல் தொகுப்பை அவரவர் ஊரில் அவரவர் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளில் மட்டுமே டோக்கன் பெற்று வாங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரூபாய் 5000 தரவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தி வரும் வேளையில் இந்த பரிசுத்தொகை மாறுமா என்றும் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.
இது ஒரு புறம் இருக்க ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் தங்களுக்கு இந்த பரிசு இல்லையே என வருந்தும் நிலையும் உள்ளது எனலாம். கடந்த சில வருடங்களாகவே ரேஷன் கார்டுகளின் முக்கியத்துவம் பெருகி வருகிறது.
ஐடி ஊழியர்கள் அதிகரித்து வருமானமும் அதிகரிவிட்ட விட்ட காரணத்தால் பொருள்களுக்கு முக்கியத்துவம் தராமல் அடையாள சான்றாக மட்டுமே நகரவாசிகள் பலரும் உபயோகப்படுத்தி வந்த நிலையில் தற்போது அரசு தரும் இந்த நிதி தங்களது கார்டுகளுக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
மேலும் லட்சக்கணக்கானவர்கள் தாங்கள் புதிய கார்டுகள் வாங்க விண்ணப்பித்தும் இன்னும் வராத நிலையில் தவிக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களுக்கு தேதி வாரியாக முன்னுரிமை தரப்பட்டு முறையான தகவல்கள் உடன் இருக்கிறதா என்று பரிசீலித்து சரியான , முழுமையான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் புதிய ரேஷன் கார்டுகளை ஒரு வார காலத்திற்குள் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் கிடைக்கவில்லை எனினும் அது சலுகைகள் மற்றும் இதர அத்தியாவசிய அடையாளங்களுக்காக ரேஷன் கார்டுகள் அவசியம் தேவை என்பதால் கார்டு இல்லாத அனைவரும் புதிய கார்டுகளுக்கான விண்ணப்பம் தரலாம்.