

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை வீடுவீடாக சென்று விநியோகம் செய்ய போவதாகவும் தகவல் வெளியானது
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர்.
பரிசு தொகுப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை
கடந்த 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. எனவே இந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசின் சார்பில் மக்களை கவரும் வகையில் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.