2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தைத் திருநாளையொட்டி ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் பொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தி.மு.க. அரசால் தொங்கப்பட்டது. முதலில் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ரொக்கப் பணப் பரிசும் சேர்த்து வழங்கப்பட்டது. ரூ.100ல் தொடங்கிய ரொக்கப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை ஏலக்காய், கரும்பு வழங்கப்பட்டது.

அதன் பிறகு 2021 மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. 2022ல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. கரும்புடன் சேர்த்து 21 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பொருட்களின் தரத்தில் சர்ச்சை எழுந்தது.

வெல்லம் உருகி இருந்ததாகவும், பச்சரிசியில் வண்டுகள், பூச்சி, புழு இருந்ததாகவும், மற்ற எல்லாப் பொருட்களும் தரமற்று இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தது. இது எல்லா சேனல்களில் தலைப்பு செய்தியாக வந்தது.

அதனால் இந்த ஆண்டு 2.19 கோடி குடும் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கரும்பு அதில் இடம்பெறவில்லை.

பின்னர் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார்.  

இந்த திட்டத்திற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வந்தனர். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொருட்களை பெற்றுக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டது.

இன்று காலை 9.00 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000ம் மற்றும் அரிசி, சர்க்கரை கரும்பு அடங்கிய தொப்பை வழங்கி முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொங்கி வைக்கிகிறார்.

 பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு:

 ஜன.12 ஆம் தேதிக்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.

இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும்

ரூ 1000த்தை சில்லறை மாற்றி வழங்கக் கூடாது

தரமான அரிசி, சர்க்கரையை வழங்க வேண்டும்

100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துவிடக் கூடாது

கரும்புகளை ஈரச் சாக்கு போட்டுப் போர்த்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அரசு முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com