’பொன்னியின் செல்வன் 2’ 300 கோடி வசூல் ! 500 கோடி வசூலை எட்டுமா?

’பொன்னியின் செல்வன் 2’  300 கோடி வசூல் !   500 கோடி  வசூலை எட்டுமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

கல்கி அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது . ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் அனைவர்க்கும் தெரிந்ததே.

இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், முதல் பாகம் போலவே இந்த படமும் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com