Minister
Minister

பராக்.. பராக்.. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாதையில் ஓர் அனுபவப் பயணம் - காணொளித் தொடர் வெளியீட்டு விழா

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமை

பராக் பராக்.. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம் காணொளி முதல் அத்யாயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி  Le Magic Lantern - Preview Theatre ல் செப்டெம்பர் 23ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி முதல் அத்யாயக் காணொளியை மாண்புமிகு தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் , ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Minister Mr.Thangam Thennarasu
Minister Mr.Thangam Thennarasu

கல்கி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மி நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் படைப்புரை வழங்கினார். படக்குழுவினருக்கும் ”பொன்னியின் செல்வன் மகுடம் யாருக்கு?” என்ற வினாடி வினாப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசும் வழங்கி தலைமையுரையாற்றினார் மாண்புகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்.

மொத்தம் 16 எபிஸோடுகள் கொண்ட இந்த ஆவணப் படத்தொடர் கல்கி ஆனலைன் சேனலில் இன்று முதல் பிரதிதினம் இரவு 8:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியையும் எதிர்வரும் தொடரையும் தவறாமல் கண்டு ரசிக்க கீழ்காணும் கல்கி ஆன்லைன் யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com