நாம் தொண்டு நிறுவனம் வெளியிட்ட பொன்னியின் செல்வன் காலண்டர் 2023!

நாம் தொண்டு நிறுவனம் வெளியிட்ட பொன்னியின் செல்வன் காலண்டர் 2023!

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களை வைத்து பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் காலண்டர் (நேற்று) ஜனவரி 4 ஆம் தேதி மாலை நாம் தொண்டு நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட்டது .

நாம் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் சுஹாசினி மணிரத்னம் பொன்னியின் செல்வன் காலண்டர்களை தி .நகரிலுள்ள நாம் தொண்டு நிறுவனத்தில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் ஜெயம் ரவி, ரஹ்மான், ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் காலண்டரை நடிகையும் நாம் பவுண்டேசன் நிறுவனருமான சுஹாசினி மற்றும் மணிரத்தினம் வெளியிட கல்கி அவர்களின் பெயர்த்தி கௌரி அவர்கள் பெற்றுக் கொண்டார். பின்பு நடிகர்கள் ஜெயம் ரவி, ரஹ்மான், ஜெயராம் ஆகியோர் காலண்டர்களை பெற்றுக் கொண்டனர். விஜய் டிவி ரம்யா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். சூப்பர் சிங்கர் புகழ் சாய் விக்னேஷ் மற்றும் அபர்ணா பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களை பாடினர்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன் , வந்திய தேவன் , அருள் மொழி வர்மன், நந்தினி , குந்தவை , பூங்குழலி, மதுராந்தகன், செம்பியன்மாதேவி , பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன் ஆகிய கேரக்டர்களை வைத்து இந்த 2023 வருடத்திற்கான இந்த காலண்டர் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com