பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா: அமைப்பினர் கைது!

PFI
PFI
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

இதில் தற்போது பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Arrest
Arrest

பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 23ம்தேதி பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் சில வாகனங்கள் மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை கண்டறிய, போலீசார் 7 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

அதில் தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது ரபீக் 26. மாலிக் என்ற சாதிக் பாஷா 32, ரமீஷ்ராஜா 36 ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com