இனி தபால்கள் மின்னல் வேகத்தில்! அஞ்சல் துறையின் புதிய சேவை அறிமுகம்..!!

24 hour postal service
Postal service
Updated on

நாடு முழுவதும் தபால் சேவையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதோடு, அதிவிரைவு தபால் சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் தபால்கள் சென்றடையும் வகையில் ‘24 விரைவு தபால்’ என்ற புதிய சேவையை இன்று (மார்ச் 17) முதல் அறிமுகம் செய்கிறது இந்திய அஞ்சல் துறை.

இந்த தபால் சேவையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று அறிமுகம் செய்கிறார். அதிமுக்கிய மற்றும் அவசரமாக அனுப்பப்படும் தபால் சேவைகள், 24 மணி நேரத்திற்குள் சென்றடைவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.

முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ‘24 மணி நேர விரைவு தபால்’ சேவை அறிமுகமாகிறது.

பொதுவாக நாட்டில் புதிய ரயில் சேவைகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கும் போது, பொதுமக்களின் வசதிக்காக அந்த இடங்களில் அஞ்சல் துறை தனது சேவைகளை விரிவுபடுத்துவது வழக்கம். அவ்வகையில் கடந்த மார்ச் 14-ம் தேதி வேளச்சேரி முதல் மழை வரையிலான பார்க்கும் தொழில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்ட வழித்தடத்தில் அஞ்சல் துறை தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. அதற்கேற்ப இன்று முதல் அறிமுகமாக உள்ள 24 மணி நேர விரைவு தபால் சேவையும் இங்கு அறிமுகம் ஆகிறது.

சேவையின் சிறப்பம்சங்கள்:

* ​அதிவேக விநியோகம்: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையே தபால்கள் 24 மணி நேரத்திற்குள் சென்றடையும் வகையில் புதிய வழித்தடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ​

* டிஜிட்டல் வசதி: சமீபத்தில் 108 ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவைகளுக்கு வாட்ஸ்அப் வசதி அறிமுகமானது போலவே, விரைவு தபால் சேவை நிலையை அறிய மேம்படுத்தப்பட்ட மொபைல் செயலிகள் மற்றும் குறுந்தகவல் அறிவிப்புகளும் இன்று முதல் கூடுதல் துல்லியத்துடன் செயல்படும்.

* நேரடி சேகரிப்பு: குறிப்பிட்ட வணிகப் பகுதிகள் அல்லது அதிக மக்கள் நடமாட்டம் உள்ள புதிய ரயில் நிலையங்களில் 'தபால் சேகரிப்பு பெட்டிகள்' மற்றும் கவுண்டர்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன

இதையும் படியுங்கள்:
உனக்காக காத்திருக்கும் தபால் பெட்டி!
24 hour postal service

கவனிக்க வேண்டியவை: ​

நேரம்:

தினசரி மாலை 5 மணிக்குள் நீங்கள் பதிவு செய்யும் விரைவு தபால்கள் மட்டுமே அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்றடையும் வாய்ப்பு அதிகம். ​

பின்கோடு:

புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், சரியான பின்கோடு குறிப்பிடுவது தபால் விநியோகத்தை இன்னும் வேகப்படுத்தும்.

கட்டணம்:

தூரம் மற்றும் தபால் எடையைப் பொறுத்து கட்டணம் வேறுபடும். 50 கிராம் எடையுள்ள தபால் உள்ளூர் பகுதிகளுக்கு அனுப்ப ரூ.15 கட்டணமும், 200கி.மீ. தூரம் வரை அனுப்ப ரூ.35 கட்டணமும் வசூலிக்கப்படும். ஒவ்வொரு கூடுதல் 50 கிராமிற்கும் ரூ.10 கட்டணம் அதிகரிக்கும். இதில் ஜிஎஸ்டி கட்டணம் தனியாக சேர்க்கப்படும்.

இதையும் படியுங்கள்:
ஒரே ஆண்டில் 39 படங்கள்: உலக சாதனைப் படைத்த இந்திய நடிகர் யார் தெரியுமா?
24 hour postal service
logo
Kalki Online
kalkionline.com