ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.44,995 வட்டி! அசத்தும் போஸ்ட் ஆபீஸ் TD திட்டம் - முழு விபரம் உள்ளே!

உங்களிடம் உள்ள ஒரு லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 வருட முடிவில் உங்களுக்கு ரூ.1,44,995 மொத்த தொகையாக கிடைக்கும்.
Post Office Saving Schemes
Post Office Saving Schemes
Published on

இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்பு என்றாலே, பெரும்பாலானோர் முதலில் பார்ப்பது பாதுகாப்பை தான். அந்த வகையில் மக்களின் மத்தியில் அதிகளவும் நம்பிகைகையை பெற்றுள்ளது அஞ்சல் துறை திட்டங்கள். அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் துறை என்பதால் உங்களுடைய பணத்திற்கு என்ன ஆகுமோ என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்களுடைய அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டும் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தப்படுவதை அரசு உறுதி செய்கிறது.

தற்போது சேமிப்புக் கணக்குகள், ஆர்டி, பிபிஎஃப் (PPF) போன்ற பல்வேறு வங்கிச் சேவைகளை இந்திய அஞ்சல் துறை அரசின் உத்தரவாதத்துடன் மக்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில், பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாமல், உத்தரவாதமான அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக, தற்போது வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட்களை (FD) விட வலுவான ரிட்டர்ன் தரும் ஒரு அரசுத் திட்டம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அதுதான், இந்திய அஞ்சல் துறையின் (Post Office) மூலம் வழங்கப்படும் 'டைம் டெபாசிட்' (Time Deposit - TD) திட்டம்!. சமீபகாலமாக மிகவும் பிரபலமாக மாறிவரும் டைம் டெபாசிட் (TD) ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இணையான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தத் திட்டம் மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்குவதால், உங்கள் முதலீட்டுக்கு 100% பாதுகாப்பு உத்தரவாதம் தருவதுடன் எந்தவித ஆபத்தும் (Risk) இல்லாமல் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மாதம் வெறும் ₹1000 முதலீடு: ₹8 லட்சம் சம்பாதிக்கலாம்... அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!
Post Office Saving Schemes

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த திட்டமானது பல வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை ஒப்பிடும்போது, அஞ்சல் துறையின் டைம் டெபாசிட் கவர்ச்சிகரமான அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. சொல்லப்போனால், ஒரு வழக்கமான வங்கியில் நீங்கள் ஒரு FD கணக்கை தொடங்கும் போது TD திட்டத்தின் கீழ் அஞ்சல் துறை வழங்கும் வட்டி விகிதங்களை விட உங்களுக்கு குறைவான வட்டி விகிதங்களே கிடைக்கும்.

உங்களிடம் உள்ள ஒரு லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 வருட முடிவில் உங்களுக்கு ரூ.1,44,995 மொத்த தொகையாக கிடைக்கும்.

சுருக்கமாக சொல்வதென்றால், நீங்கள் 5 வருடங்கள் கொண்ட டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால் இதற்கான வட்டி 7.5% எனும் போது உங்களுக்கு 44,995 ரூபாய் வட்டியாக மட்டுமே கிடைக்கும். அதாவது மெச்சூரிட்டியின் போது, உங்களுடைய அசல் தொகையையும் சேர்த்து உங்களிடம் 1,44,995 ரூபாய் இருக்கும். இதே பணத்தை நீங்கள் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதாக கருதி ஒப்பிட்டு பாருங்கள். இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெளிவாக தெரியும்.

உங்களுடைய பணத்தை வசதிக்கேற்ப 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் காலத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். தற்போது தபால் துறையானது ஒரு வருட TDக்கு 6.9 சதவீதமும், 2 வருடங்களுக்கு 7.0%, 3 வருடங்கள் மற்றும் 5 வருடங்களுக்கு 7.5% வட்டி விகிதங்களையும் வழங்கி வருகிறது.

ஆரம்பத்தில் நீங்கள் பல லட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் என்று கிடையாது. இந்த அக்கவுண்ட்டை திறப்பதற்கு உங்களிடம் 1000 ரூபாய் இருந்தால் போதுமானது.

இதில் அதிகப்பட்ச வரம்பு எதுவும் கிடையாது. தனிப்பட்ட கணக்கு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது குழந்தைகளோடு சேர்ந்து மூன்று நபர்கள் வரை கூட்டுக் கணக்கைத் (Joint Account) திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை வங்கிகள் மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் வட்டி அளிக்கும் நிலையில், இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே வட்டி விகிதம் (7.5%) விதிக்கப்படுகிறது.

சாமானிய மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். கையில் ரூ.1 லட்சம் வைத்திருக்கும் சாமானிய மக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பலனடையலாம். குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் முதல் பெரிய அளவில் சேமிக்க நினைக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதாக இருக்கிறது.

எந்த ஆபத்தும் இல்லாமல் உங்கள் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த நினைக்கும் சாமானிய மக்கள், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உடனடியாக இந்த டைம் டெபாசிட் கணக்கைத் தொடங்கிப் பயனடையலாம்.

இதையும் படியுங்கள்:
ஒருமுறை முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ.9,250 வட்டி கிடைக்கும்.. சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்...!!
Post Office Saving Schemes

எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 5 வருட அஞ்சல் துறை டைம் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com