

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள் (Post Office Savings Schemes) இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட, அதிக வட்டி மற்றும் வரிச் சலுகை கொண்ட சிறந்த முதலீட்டுத் தேர்வுகளாகும். இந்தியாவில் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபிஸ் தான். ஏனெனில், இங்குள்ள திட்டங்கள் அதிக வட்டியுடன் பாதுகாப்பான முதலீட்டுக்கான உத்தரவாதத்தையும் வழங்குகின்றன. பல சேமிப்பு திட்டங்களில், மாதாந்திர வருமான திட்டம் (MIS) தனித்துவமானது. இதில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிற்கு நிலையான வட்டி வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்களை பொருத்தவரை, பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானம் என்பதால், பல கோடி இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது என்றே சொல்லாம்.
எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் (Post Office Time Deposit Scheme) மிகவும் லாபகரமான சேமிப்பு திட்டமாகும். இதில் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டுமே ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். தற்போது, போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச ஆண்டு வட்டி விகிதம் 7.5% ஆகும். வட்டி விகிதமானது முதலீட்டு காலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் கால்குலேட்டரின்படி, உங்களுடைய கையில் 4.5 லட்சம் ரூபாய் பணம் இருந்தால் அதனை ஐந்தாண்டு காலத்திற்கான டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. அப்படி என்றால் ஐந்து ஆண்டுகள் முடியும்போது நீங்கள் முதலீடு செய்த 4.5 லட்சம் கூடுதலாக 2.01 லட்சம் ரூபாய் வட்டி தொகையும் கிடைக்கும்.
அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.4.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.6,52,477 கிடைக்கும்.
இதில் ரூ.2,02,477 வட்டி வருமானமாக மட்டுமே கிடைக்கும் என்பதால் பலரின் விருப்ப திட்டமாக இது உள்ளது.
அதேபோல் நீங்கள் 2.5 ஐந்து லட்சம் ரூபாய் இதேபோன்று ஐந்து ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்தால் கூட 1.12 லட்சம் வட்டி வருமானமாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
3 ஆண்டுகளிலேயே வட்டியாக மட்டுமே 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க விரும்பினால், நீங்கள் சுமார் 10 லட்சம் ரூபாயை 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு 7.1% வட்டி விகிதத்தில், உங்கள் மொத்தத் தொகை 12,35,075 ரூபாயாக இருக்கும். அதில் 2,35,075 ரூபாய் வட்டி வருமானமாகக் கிடைக்கும்.
அதாவது இந்த திட்டத்தில் முதலீட்டு காலத்திற்கு ஏற்ப வட்டி செலுத்தப்படுகிறது. அதாவது, முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு மொத்த தொகையை முதலீடு செய்யலாம்.
இது தவிர, தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்கும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டிற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை. அதாவது நீங்கள் விரும்பும் அளவுக்கு முதலீடு செய்யலாம்.
ஐந்தாண்டு கால டெபாசிட் டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் வருமான வரி கணக்கு தாக்கல் என்பது 80சி பிரிவின் கீழ் குறிப்பிட்டு வரி விலக்கும் பெறலாம்.