
இந்தியாவில் யுபிஐ(UPI) என்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. யுபிஐ (UPI) என்பது யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கமாகும். யுபிஐ என்பது ஒரு மொபைல் செயலி மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் டிஜிட்டல் கட்டண முறையாகும்.
இது ஒரு மொபைல் செயலி மூலம் உடனடிப் பணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம் என்பதால் மக்கள் அதிகளவில் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் யுபிஐ மூலமே பெரும்பாலான பணபரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன என்றே சொல்லலாம். இதன் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். கூகிள் பே, ஃபோன்பே போன்ற பல செயலிகள் யுபிஐ கட்டண முறையை பயன்படுத்துகின்றன.
யுபிஐயில் சில புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதில் ஒரு நாளில் ஒரு செயலியில் இருந்து அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும். யுபிஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் செயலியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ மூலம் ஒரு செகண்டுக்கு சுமார் 7,000 பண பரிவர்த்தனைகள் நடப்பதாக கூறியுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல் மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ஆன்லைன் முதலீடுகள் வரை யுபிஐ மூலமாக நிதி பரிவர்த்தனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் அரசு தபால் நிலையங்களில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இதற்கு காரணம், தபால் நிலையங்களில் ஐ.டி சிஸ்டமோடு, யுபிஐ இணைக்கப்படவில்லை. சிலமாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தபோதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் தற்போது தொழில்நுட்ப சிக்கல்கள் அனைத்தையும் இந்திய தபால்துறை சீரமைத்துள்ளது. இதனால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தபால் நிலையங்களில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ மூலமாக கட்டணங்கள் செலுத்துவது அமல்படுத்தப்பட உள்ளது.