தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!
எல்.ரேணுகாதேவி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக மாநில உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் திறப்பு மேலும் ஐந்து நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் 7ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும், வரும் 11ம் தேதி வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதன்காரணமாக பள்ளி திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆவதால், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானதும் என தெரிவிக்கப்பட்டது. கோடை வெயில் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வெளியிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com