டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1!

டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.1 என்கிற அளவில் பதிவாகி இருக்கிறது. சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப் படவில்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

earth quake
earth quake

டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை யடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். டோக்கியோவில் இருந்து 107 கி.மீ தூரத்தில் மதியம் 3:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து கட்டடங்களை விட்டு மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இந்த நில நடுக்கத்தை யடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்க ப்பட வில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

logo
Kalki Online
kalkionline.com