

மத்திய அரசின் மின் விநியோகிக்கும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள நிறுவன செயலாளர் (Company Secretary) பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
துறையின் பெயர் : மத்திய மின்சாரத்துறை
நிறுவனம் பெயர் : பவர்கிரிட்
பதவியின் பெயர் : நிறுவன செயலாளர்
பணியிடங்கள் : 48
இணையதளம் : https://powergrid.in/
இதில் பொதுப் பிரிவில் 21, ஒபிசி பிரிவில் 12, எஸ்சி பிரிவில் 7, எஸ்டி பிரிவில் 4, மாற்றுத்திறனாளிகள் - 6, முன்னாள் ராணுவத்தினர் - 6 என நிரப்பப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியான வயது வரம்பு என்பது 29 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி :
பவர்கிரிட் நிறுவன செயலாளர் பதவிக்கு விண்ணப்பதார்கள் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) இணை உறுப்பினர் (Associate Member) தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் நிறுவன செயலாளராக பணியாற்றி இருக்க வேண்டும். பயிற்சி காலங்கள் அனுபவமாக எடுத்துகொள்ளப்படாது.
சம்பள விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருடத்திற்கு தோராயமாக ரூ.9.96 லட்சம் ஆகும். மருத்துவ காப்பீடு, பிஎஃப் ஆகிய சலுகைகளும் உள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணபப்தார்களுக்கு நேர்காணல் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம், ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 30 சதவீதம் என்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் விண்ணப்பதார்கள் பதிவு செய்து அதனைப் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் உரிய இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொண்டிருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்ப புகைப்படம், பிறப்பு சான்று, கல்வித்தகுதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். SC/ST/PwBD/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.12.2025
மத்திய அரசின் மின்விநியோகிக்கும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷனில் உள்ள நிறுவனத்தின் நிறுவன செயலாளர் பதவிக்கு தகுதியானவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.