டி.டி தமிழ் செய்தியில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.60,000 வரை சம்பளம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

DD TAMIL
DD TamilSOURCE:BUSINESS TODAY
Published on

மத்திய அரசின் பிரசார் பாரதியின் செய்தித் தொலைக்காட்சியான டிடி செய்தியில், தேசிய அளவில் பல்வேறு பதவிகளில் மொத்தம் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ் பிரிவிலும் 13 காலிப் பணியிடங்கள் உள்ளன.மூத்த நிருபர், செய்தி வழங்குபவர், புல்லட் இன் எடிட்டர், ஒலிபரப்பு நிர்வாகி, அசைன்மெண்ட் ஒருங்கிணைப்பாளர், கண்டண்ட் எக்ஸ்குடிவ், காப்பி எடிட்டர், காப்பி ரைட்டர், பேக்கிங் உதவியாளர், வீடியோகிராப்பர் உள்ளிட்ட பதவிகள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் :

  • மூத்த நிருபர் (Senior Reporter): 2 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை.

  • செய்தி வழங்குபவர் உடன் செய்தியாளர் (கிரேடு-2): 7 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 45,000 முதல் ரூ. 60,000 வரை.

  • செய்தி வழங்குபவர் உடன் செய்தியாளர் (கிரேடு-3): 10 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை.

  • புல்லட் இன் எடிட்டர் (Bullet In Editor): 4 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை.

  • ஒலிபரப்பு நிர்வாகி (Broadcast Executive): 4 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 30,000.

  • வீடியோ போஸ்ட் ப்ரோடக்‌ஷன் உதவியாளர்: 2 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை.

  • அசைன்மென்ட் ஒருங்கிணைப்பாளர் (Assignment Coordinator): 3 காலிப் பணியிடங்கள். சம்பளம்: ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை.

  • கண்டென்ட் எக்ஸ்குடிவ் (Content Executive): 8 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை.

  • காப்பி எடிட்டர் (Copy Editor): 7 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரை.

  • காப்பி ரைட்டர் (Copy Writer): 1 காலிப் பணியிடம். சம்பளம் – ரூ. 30,000.

  • பேக்கிங் உதவியாளர் (Packing Assistant): 6 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை.

  • வீடியோகிராப்பர் (Videographer): 5 காலிப் பணியிடங்கள். சம்பளம் – ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை.

இதில் சென்னையில் செய்தி வழக்குபவர் உடன் செய்தியாளர், புல்லட் இன் எடிட்டர், வீடியோ போஸ்ட் ப்ரோடக்‌ஷன் உதவியாளர், அசண்மெண்ட் ஒருங்கிணைப்பாளர், கண்டண்ட் எக்ஸ்குடிவ், காப்பி எடிட்டர், பாக்கிங் உதவியாளர் ஆகிய பதவிகள் உள்ளன.

வயது வரம்பு :

  • மூத்த நிருபர், ஒலிபரப்பு நிர்வாகி, வீடியோ போஸ்ட் ப்ரோடக்‌ஷன் உதவியாளர், அசண்மெண்ட் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • செய்தி வழக்குபவர் உடன் செய்தியாளர் பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • புல்லட் இன் எடிட்டர் பதவிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • கண்டண்ட் எக்ஸ்குடிவ், காப்பி எடிட்டர் ஆகிய பதவிகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • பாக்கிங் உதவியாளர் பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • வீடியோகிராப்பர் பதவிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

மூத்த நிருபர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் இதழியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதழியல், மக்கள் தொடர்பியல் அல்லது இதன் தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். 2 வருடன் அனுபவம் அவைச்யம்.

செய்தி வழக்குபவர் உடன் செய்தியாளர் பதவிக்கு பட்டப்படிப்புடன் இதழியல், தொடர்பியல், காட்சி தொடர்பியல், செய்தி வாசிப்பு, ரிப்போர்ட்டிங் ஆகியவற்றில் பட்டப்படிப்பு அல்லது இதழியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 முதல் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

புல்லட் இன் எடிட்டர் பதவிக்கு இதழியலில் பட்டப்படிப்பு அல்லது பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 7 ஆண்டுகள் அனுபவம் தேவை. செய்தியாளராக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒலிபரப்பு நிர்வாகி பதவிக்கு ரேடியோ, டிவி ஆகியவற்றில் டிகிரி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வீடியோ போஸ்ட் ப்ரோடக்‌ஷன் உதவியாளர் பதவிக்கு திரைப்படம், வீடியோ எடிட்டிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

அசண்மெண்ட் ஒருங்கிணைப்பாளர் இதழியலில் பட்டப்படிப்பு அல்லது பிஜி டிப்ளமோ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டு அனுபவம் அவசியம்.

கண்டண்ட் எக்ஸ்குடிவ் பதவிக்கு இதழியல் மற்றும் டிப்ளமோ மற்றும் சமூக ஊடகத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காப்பி எடிட்டர், காப்பி ரைட்டர் பதவிகளுக்கு இதழியலில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியமாகும்.

பாக்கிங் உதவியாளர் பதவிக்கு இதழியலில் பட்டப்படிப்புடன், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு அனுபவம் அவசியம்.

வீடியோகிராப்பர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் வீடியோகிரப்பி, சினிமோகிராப்பி ஆகியவற்றில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்கள் தற்காலிக முறையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணியிடத்திற்கான தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிற பதவிகளுக்கான தகுதிகள்

ஒலிபரப்பு நிர்வாகி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ரேடியோ/டிவி ஆகியவற்றில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

கண்டென்ட் எக்ஸ்குடிவ்: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதழியல் மற்றும் டிப்ளமோ உடன் சமூக ஊடகத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

காப்பி எடிட்டர் / காப்பி ரைட்டர்: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதழியலில் டிப்ளமோ/பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வீடியோ போஸ்ட் ப்ரோடக்‌ஷன் உதவியாளர்: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். திரைப்படம்/வீடியோ எடிட்டிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதற்கு 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

பாக்கிங் உதவியாளர்: 30 வயதிற்குள். இதழியலில் பட்டப்படிப்புடன் டிப்ளமோ முடித்து 1 ஆண்டு அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://avedan.prasarbharati.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விரும்பமுள்ளவர்கள் அக்டோபர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு புது ரூல்ஸ்..! இனி கன்ஃபார்ம் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே இந்த 4 ரயில் நிலையம் உள்ளே செல்ல முடியும்..!
DD TAMIL

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com