ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா ? பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

premalatha vijaykanth
premalatha vijaykanth
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது கேள்வியாக இருந்தது. இரண்டு பக்கங்களிலும் தேமுதிக கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிக – திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. கூட்டணியில் இணைந்த உடனேயே பெரும் இன்ப அதிர்ச்சியாக , தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை திமுக அளித்தது. அதன்படி அந்த கட்சியின் பொருளாளரான L.K. சுதீஷ் ராஜ்யசபா உறுப்பினர் ஆகி விட்டார். 

மற்ற கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தைகளைக் நடத்தி வரும் வேளையில், ராஜ்யசபா உறுப்பினர் பதவி தேமுதிக மிகவும் பொறுமையாக உள்ளது. தேமுதிகவிற்கு கிடைத்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பார்த்து , கூட்டணியில் நீண்ட காலமாக ஆதரவு கொடுத்து வரும் மற்ற கட்சிகளுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

 இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது இரண்டு மகன்களும் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் டிபண்டர்(Defender) கார், முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் வைரலாகி வந்தது. இந்த காரை பார்த்த எதிர்கூட்டணி ஐடிவிங்கை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்தனர். திமுக கூட்டணியில் அவர்கள் இணைந்ததற்காக கொடுக்கப்பட்ட பரிசு தான், இந்த கார் என்று  கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. ஒரு சிலர் தேமுதிகவிற்கு இந்த கார் மிகவும் அதிகம் என்று திமுகவிற்கு தெரியவில்லை,  என்றும் கேலியாக விமர்சித்திருந்தனர்.

திமுக கூட்டணியில் இணைந்த பிறகு ​இன்று (மார்ச்.23) தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ,கோயம்பேட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுவது ? எந்த தொகுதியில் அதிக வாக்கு வங்கி உள்ளது ? போன்றவற்றை விவாதிப்பதற்காக கூட்டப்பட்டது. திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால் , தேமுதிகவின் இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு திமுக கூறியிருந்தது.அது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய போது சர்ச்சைக்குள்ளான கார் பற்றியும் பேசினார். நாங்கள் அந்த சொகுசு காரை வாங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த காரை இப்போதுதான் திருப்பதி செல்வதற்கு நாங்கள் பயன்படுத்தினோம். உடனேயே அந்த காரை நாங்கள் இப்போதுதான் வாங்கியதாக அவதூறு பரப்புகிறார்கள்.

​“ஒரு கார் வாங்கும் அளவுக்கு கூட கேப்டன் குடும்பத்திற்கு தகுதி இல்லையா? தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்து கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு கேப்டன் சொந்தக்காரர். அவர் தன் வாழ்நாளில் சம்பாதித்த வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் மேலாக மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவர். அவரது குடும்பம் ஒரு கார் வாங்கியதை பொறுத்துக் கொள்ளாமல் விமர்சிப்பவர்கள் , கேப்டன் மக்களுக்கு செய்த உதவிகளில் ஒரு சதவீதமாவது செய்திருப்பீர்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

குறை சொல்பவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அதற்கெல்லாம் நாங்கள் விளக்கம் அளிக்க தேவையில்லை. கேப்டன் குடும்பம் ஒரு கார் வாங்கியதை விமர்சிப்பவர்களுக்கு கேப்டனை பற்றி பேசக்கூட தகுதி இல்லை. அவர் செய்த உதவிகள் மக்களுக்கு நன்றாக தெரியும், அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். 

இதையும் படியுங்கள்:
சிவப்பு, நீலம், மஞ்சள்... சிலிண்டர் நிறங்களின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
premalatha vijaykanth
logo
Kalki Online
kalkionline.com