

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆங்கிலேயர் ஆட்சி் காலத்தில் வழக்கத்தில் இருந்த 'கவர்னர் ஜெனரல்' பதவியை வகித்த முதல் இந்தியரான சி. ராஜகோபாலாச்சாரியாரை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையின் மைய முற்றத்தில் அவரது மார்பளவு சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நாள் "ராஜாஜி உத்சவ்" என கொண்டாடப்படுகிறது.அவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார் அதிகாரத்தை ஒரு பதவியாக கருதாமல் ஒரு சேவையாக கருதி வாழ்ந்தவர்.
தமிழ்நாட்டின் அப்பொழுதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகாவின் தொரப்பள்ளி கிராமத்தில் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பிறந்தவர் ராஜாஜி. மகாத்மா காந்தியின் ஆரம்பகால அரசியல் நம்பிக்கைக்குறிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ரவுலட் சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் .வைக்கம் சத்யாகிரகம் உப்பு சத்தியாகிரகம் எனத் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் கொடுங்கோன்மை மற்றும் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டங்களில் பங்கெடுத்தார்.
1937-ல் மதராஸ் மாகாணத்தின் முதன்மை அமைச்சராக தேர்வாகி 1940 ஆம் ஆண்டு வரைபணியாற்றினார். 1946 இல் அமைந்த இடைக்கால அரசில் மத்திய தொழிற்சாலைகள் கல்வி நிதி துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜாஜி, 1947-48ல் மேற்கு வங்காள கவர்னராக பணியாற்றியுள்ளார்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக பணியாற்றினர்.இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தலைவரான சி.ராஜகோபாலாச்சாரியாரை கௌரவிக்கும் விதமாக அவரின் மார்பளவு சிலையை குடியரசு தலைவர் மாளிகை மையம் முற்றத்தில் திறக்கப்பட்டுள்ளது .
ராஜாஜி அவர்கள் கூறிய சில மணிமொழிகளையும் பார்ப்போம் :
நிர்வாகம் நல்லதாக இருந்தால், யார் மந்திரியாக வந்தாலும் கவலையில்லை.மந்திரிகள் வருவார்கள், போவார்கள்; ஆனால் அதிகாரிகள் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். கிளார்க்குகளாகட்டும் சூப்பரண்டுகளாகட்டும் அல்லது காரியதரிசிகளாகட்டும் அனைவரும் பயமோ பாரபட்சமோ இன்றி உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் போல நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.
"அஜந்தா, புத்தகயா, மைசூர் குகைக் கோயில்களைப் பாருங்கள்; முற்காலத்தில் எதையுமே சிறியதாகச் செய்ததில்லை. அன்று மனம் விரிவாக இருந்தது, பொறுமையும் உழைக்கும் சக்தியும் இருந்தது. இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்கிறோம், ஆனால் சாதனை என்னவோ சிறியதாகவே இருக்கிறது."
தமிழ்நாட்டை இன்னும் கொஞ்சம் மேம்படச் செய்ய நாம் யோசிக்க வேண்டும். ஒருவரோடு ஒருவர் தோழர்களாக கங்கணம் கட்டிக்கொண்டு போட்டிகளையும் வெறுப்புகளையும் தள்ளி தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் மிக நல்லவர்கள். பொய்யும் பித்தலாட்டமும் அவர்களிடம் கிடையாது. அவர்கள் புத்திசாலிகள் நகைச்சுவை பொங்கியொழுக படைத்தவர்கள். படபடப்பு கிடையாது, அகம்பாவமில்லை துன்மார்க்கத்தை வெறுக்கிறார்கள். அவர்களை எப்போதும் நம்பலாம்.மற்றவர் குற்றங்களைக் கவனிப்பதை விட, அவரவர் தங்களைத் தாமே சீர்திருத்திக் கொண்டால் தமிழ்நாடு மேன்மை அடையும்."
மனிதனின் உள்ளத்தில் ஒரு ஆசை உண்டாகிறது அதை தீர்த்துக் கொண்டால் பிறகு சுகமாக இருக்கலாம் என்று எண்ணுகிறான். அதற்கு படாதபாடு படுகிறான், ஆனால் ஆசைகளின் படிகளுக்கும் முடிவே இல்லை. முடிவில்லை என்று அறிந்து கொள்வதற்கும் அது இடம் தராது. சுற்றும் சக்கரவட்டமாக ஒரு ஏணியின் மேல் ஏற பார்க்கிறோம் அது ஏற ஏற சக்கரம் கீழே போகிறது, ஆனால் ஒரு படி ஏறியதும் ஏறியபடி கீழே போய்விடும் புதுப்படி வந்து நிற்கும்.
படிகளுக்கு முடிவே இல்லை சிரமத்திற்கும் முடிவே இல்லை சாகும் வரை ஏறுவதே வேலை. ஒன்றை அடைந்தால் பிறகு சும்மா இருக்கலாம் என்று தோன்றும், ஆனால் அவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியாது புது ஆசை உண்டாகும் இதுவே ஆசையின் கதையாகும்.