ரேஷன் அட்டைதாரர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ் : பொங்கலை போல தீபாவளிக்கும் இலவச மளிகை தொகுப்பு..!!

பொங்கல் பரிசு போல் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு தொகுப்பு வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்image credit-whispersinthecorridors.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவது போல் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு அரசு சார்பில் சிறப்பு இலவச மளிகை தொகுப்பு வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. பொதுவாக இந்தத் தொகுப்பில் பொங்கல் வைப்பதற்குத் தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் முழு முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளில் பொதுமக்களின் பண்டிகைச் செலவுகளுக்காக ரொக்கப் பணமும் இதனுடன் சேர்த்து வழங்கப்படுவது வழக்கம்.

இதற்கிடையே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் ரூ.700 மதிப்பிலான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் (சமையல் எண்ணெய் 2 லிட்டர், சர்க்கரை 2 கிலோ, கடலைப்பருப்பு 1 கிலோ, ரவை அரை கிலோ, மைதா அரை கிலோ)அடங்கிய சிறப்புத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நமது அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான 5 வகை அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேபோல, தமிழகத்திலும் இத்தகைய தீபாவளிச் சிறப்புத் தொகுப்பு குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு இலவச மளிகைத் தொகுப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச மளிகைத் தொகுப்பு
இலவச மளிகைத் தொகுப்பு

அதாவது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது போல, தீபாவளி பண்டிகைக்கும் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை போன்று தமிழ்நாட்டிலும் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் விஜய், இந்த சிறப்புத் தொகுப்பை வழங்குவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்த செலவின விவரங்களை நிதித் துறையிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ரெடி.! வெளியானது முக்கிய அறிவிப்பு.!
முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. தொடர்ந்து அரிசி, பருப்பு, மளிகை பொருட்களின் விலை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தவெக, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 2026-க்கான சில்லறை பணவீக்க (Retail Inflation) புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் விலைவாசி உயர்வு மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மளிகைத் தொகுப்பு வழங்கப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் ஆறுதல் அடைவர் என முதலமைச்சர் விஜய்யிடம் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே இந்த நெருக்கடியை சமாளிக்க, தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்கிற விவரங்களை நிதித்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி..!
முதலமைச்சர் விஜய்

அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com