தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Vande Bharat Train
Vande Bharat Train
Published on

தமிழகத்தில் ஏற்கனவே ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 2 ரயில்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், டெல்லி முதல் வாரணாசி இடையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு, தற்போது இந்தியா முழுவதும் மொத்தம் 82 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் இலக்கு 4,500 வந்தே பாரத் ரயில்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். நாடு சுதந்திரம் அடைந்து நூற்றாண்டைத் தொடும்போது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. இந்தத் திட்டத்துடன் தமிழகத்திற்கும் பல்வேறு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, கோவை – பெங்களூரு கண்டொன்மென்ட் ஆகிய ரயில்கள் தெற்கு ரயில்வேயின் கீழும், மைசூரு – சென்னை சென்ட்ரல் ரயில் தென்மேற்கு ரயில்வேயின் கீழும் இயக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் வந்தே பாரத் ரயில்கள் பயணித்த அளவு என்பது பூமியை 310 முறை சுற்றியதற்கு சமமாகும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

2019ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 2 கோடி பேர் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ரிப்போர்ட் கூறுகிறது. அடுத்தக்கட்டமாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
விரைவில் தமிழகம் முழுவதும் மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் அமல்!
Vande Bharat Train

இந்தநிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி இன்று புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த புதிய ரயில்கள், தமிழக மக்களுக்கு விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்த ரயில்கள் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும். அதேபோல், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் கரூர், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com