Vladimir Putin in inaugration ceremony
Vladimir Putin

ரஷ்யா: ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபரானார் விளாடிமிர் புதின்!

Published on

ரஷ்யா – உக்ரைன் போரினால், பல எதிர்ப்புகளை சந்தித்து வந்த புதின், அந்த எதிர்ப்புகளுக்கு நடுவிலும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ரஷ்யாவின் அதிபரானார். இவர் 5வது முறையாக மீண்டும் ரஷ்யாவின் அதிபரானது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் எப்படி பிரதமர், அதிபர் போன்ற பதிவிகளுக்கு ஐந்தாண்டுகள் பதவி காலமோ, அதேபோல் ரஷ்யாவில் அதிபருக்கு 6 ஆண்டுகள் பதவி காலமாகும். அந்தவகையில் கடந்த 1999ம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்ற விளாடிமிர் புதின், தற்போது 5வது முறையாகவும் வெற்றிபெற்றுள்ளார். ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

விளாடிமிர் புதினுக்கு எதிராக லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர். மார்ச் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்தவகையில் தற்போது ரஷ்யா அதிபராக விளாடிமிர் புதின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு சுமார் 87.6% அளவு வாக்குகள் கிடைத்தன. உக்ரைன் போரினால், விளாடிமிர் புதினுக்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இவரது வெற்றி, உள்ளூரில் இவருக்கு இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல், சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் இது ஒருவருக்கு கிடைத்த அதிகபட்ச வாக்குகளாகும். அதிக வாக்குகளையும், ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றும் விளாடிமீர் புதின் சாதனைகளை படைத்தார்.

ரஷ்ய அதிபராக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புதின் பேசினார். அப்போது, "நாடு முழுவதும் வசிக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறேன். தாய் நாட்டுக்காக போராடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

இதையும் படியுங்கள்:
முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல் – பாலஸ்தீன போர்!
Vladimir Putin in inaugration ceremony

நேற்றைய பதவியேற்பு விழாவில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் யாருமே பங்கேற்கவில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால், அந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், விழாவில் பங்கேற்காதது வெளிப்படை எதிர்ப்பை தெரிவித்ததுபோல் அமைந்தது. விளாடிமிர் புதினால், இனி மேற்கிந்திய நாடுகளுக்கு தலைவலியாகவே இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com