எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 இமாச்சல பிரதேசத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

 -இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

 –இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com