சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

பிரதமர் மோடி வழிபாடு
பிரதமர் மோடி வழிபாடு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

குஜராத்திலுள்ள பிரசித்து பெற்ற  சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வருகிற  டிசம்பர் 1-ம் தேதி மற்றும் 5-ம் தேதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக பிரசாரத்துக்காக பிரதமர் மோடி குஜராத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார்.

அருணாச்சலின் இடா நகர், உ.பி.யில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர் குஜராத்துக்கு வந்தார். அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில் பிரதமர் மோடி குஜராத்தின்  புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் அவருக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

இதைத் தொடர்ந்து வீரவால் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.பின்னர் தோராஜி, அம்ரேலி, போடாத் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். 

logo
Kalki Online
kalkionline.com