பள்ளிகள் திறந்தாலும் பேருந்துகளை இயக்க மாட்டோம் - பள்ளிகள் சங்கம் அறிவிப்பு..!!

school bus
school bus
Updated on

ஜூன் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறக்க இருக்கிறது.பள்ளி கல்லூரிகள் திறந்தாலும் 1 லட்சம் வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காரணம் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ரூ.3,000 மதிப்புள்ள ஜிபிஎஸ் கருவிகளை ரூ.18,000 கொடுத்து வாங்க அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாகவும் மீறும் பட்சத்தில் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் (எஃப்சி) FC வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் சாா்பில் 80,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிகழ் நேரத்தில் (ரியல் டைம்) கண்காணிக்கவும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் கருவியைப் பொருத்துவதன் மூலம் வாகனங்கள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட வழியைவிட்டு மாறினாலோ அல்லது வேகமாகச் சென்றாலோ எச்சரிக்கை அறிவிப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை பாதுகாக்க உதவும் வகையில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த வேண்டும் என அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கருவியை அதிகாரிகள் குறிப்பிடும் முகவா்களிடம்தான் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது.மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்தால் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் (எஃப்சி) வழங்க மறுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நெருக்கடியும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருவி அங்கீகரிக்கப்பட்ட தரநிலைக்கு உட்பட்டதா என்பதே முக்கியம் என்பதும் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கக் கூடாது என்பதும் வாகன சங்கங்களின் வாதம்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக்., மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலா் புகாா் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதைக் கண்டித்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை இயக்காமல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்படும் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மாணவா்களின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்பது நியாயமான உத்தரவு.ஆனால் அதை குறிப்பிட்ட நபா்களிடம்தான் வாங்க வேண்டும் என வலியுறுத்துவது முறையல்ல என்றும் முதலமைச்சர் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது பேசப்படும் “₹3,000 மதிப்புள்ள கருவியை ₹18,000க்கு வாங்கச் சொல்கிறார்கள்” போன்ற குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல என்று கூறுகின்றனர். இதேபோன்ற விவாதங்கள் முன்பும் தமிழ்நாட்டில் எழுந்திருக்கின்றன. என்றும் ஆனால், ஒவ்வொரு குற்றச்சாட்டும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா என்பது தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பாம்புகளுக்கு தனி அறை.. குழந்தைகள் பாம்புடன் விளையாடும் இந்தியாவின் விசித்திர கிராமம்!
school bus
logo
Kalki Online
kalkionline.com