நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திடம் பிரபல தயாரிப்பாளர் சுமார் 11 மில்லியன் டாலர் மோசடி செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
.
நெட்ஃப்லிக்ஸ் என்பது அமெரிக்க சந்தா அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் சேவை மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் மிகவும் பிரபலமாகும். நெஃப்லிக்ஸில்தான் இந்திய படங்கள் பலவும் வெளியிடப்படும்.
ஆகையால், ஏராளமானோர் அக்கௌன்ட் வைத்திருக்கிறார்கள். இது 1997 இல் ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் ஸ்காட்ஸ்டேல், அரிசோனாவில் நிறுவப்பட்டது. முதலில் இது ஒரு டிவி வாடகை சேவையாகத்தான் தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டுதான் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகப்படுத்தினர்.
மேலும் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்", "தி கிரவுன்", "மணி ஹெய்ஸ்ட்" மற்றும் "ரெட் நோட்டீஸ்" போன்ற பல பிரபல தொடர்களையும் தயாரித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் பயன்பாடுகள், ஸ்மார்ட் டிவிகள், கேமிங் கன்சோல்கள் மற்றும் பிற சாதனங்களில் கிடைக்கிறது.
அந்தவகையில் தற்போது இந்த நெட்ஃப்லிக்ஸையே ஒரு தயாரிப்பாளர் ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்.
கார்ல் எரிக் ரின்ச் என்ற திரைப்படத் தயாரிப்பாளர், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் ‘தி வைட் ஹார்ஸ்’ திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். படத்திற்கான செலவுக்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 11 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. ஆனால், அவர் தனது சொந்த செலவுக்காக அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார். மேலும் படத்திற்காக போலியான ஆவணங்களையும் அவர் நெட்ஃப்ளிக்ஸிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விஷயம் நெட்ஃப்லிக்ஸிற்கு தெரிய வந்ததும், கார்லோஸ் ஸ்டீவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் குறித்து நெட்ஃபிக்ஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ரிஞ்ச் விரைவில் ஒரு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை இந்த பண மோசடி வழக்கில் குற்றம் செய்தது நிரூபமணமானால் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் இருக்கக்கூடும். அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.