சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!

ரூ.20 லட்சத்திற்கும் குறைவான சொத்து பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்க வேண்டிய தேவையை நீக்கும் புதிய வரைவு விதிகளை வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளது.
property registration pan card
property registration pan card
Published on

தற்போது சொத்து பரிமாற்றம் மற்றும் பத்திரப் பதிவு நடைமுறைகளில் மிக முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு அதிரடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றமானது சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு அல்லது நிலம் வாங்கும் போது எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சத்திற்கும் குறைவான அசையாச் சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்க வேண்டிய தேவையை நீக்கும் புதிய வரைவு விதிகளை வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால், இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்ட புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட வரைவு வருமான வரி விதிகள், 2026ன் ஒரு பகுதியாகும்.

இந்தியாவை பொறுத்தவரை, எந்தவொரு அசையாச் சொத்தையும் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால், அதன் மதிப்பு எவ்வளவு இருந்தாலும் வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவருமே தங்களது பான் நம்பரை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தான் தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

இதையும் படியுங்கள்:
சொத்து வாங்குவோர் கவனத்திற்கு..! இனி அசல் ஆவணம் இல்லையென்றால் நோ ரிஜிஸ்ட்ரேஷன்..!
property registration pan card

இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பானது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்வதற்கு பான் கார்டு எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்துள்ளது.

தற்போது, ​​வீடு, பிளாட் அல்லது மனை போன்ற அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ, பரிவர்த்தனை மதிப்பு ரூ.10 லட்சத்தைத் தாண்டினால், பான் எண்ணை மேற்கோள் காட்ட வேண்டும். ஆனால் தற்போதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரைவு வருமான வரி விதிகள் 2026, இந்த வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சிறிய பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பாக சிறிய நகரங்களில் சொத்து வாங்குபவர்களுக்கு அல்லது குடும்ப சொத்து பரிமாற்றங்களைக் கையாளுபவர்களுக்கு, இந்த மாற்றம் காகிதப்பணிகளைக் குறைக்கலாம்.

பெரும்பாலான நகர்ப்புற சொத்து ஒப்பந்தங்களுக்கு பான் எண் இன்னும் தேவைப்படும் என்றாலும், தற்போதுள்ள நடைமுறை குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை முடிப்பது எளிதாகிவிடும்.

ஏனெனில், கிராமப்புறங்களில் குறைந்த மதிப்புள்ள நிலங்களை வாங்கும் போது பான் கார்டு இல்லாத காரணத்தால் பல நேரங்களில் பத்திரப் பதிவு தாமதமாவது வாடிக்கையாக இருந்தது. தற்போது இந்த அறிவிப்பால் சாதாரண மக்கள் எவ்வித தடையுமின்றி தங்களது சொத்தை எளிதாக பத்திரப்பதிவு செய்ய முடியும்.

சொத்தின் விலைகள் பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளன, மேலும் தற்போதுள்ள ரூ.10 லட்சம் வரம்பு பெரும்பாலும் சிறிய பரிவர்த்தனைகளைக் கூட உள்ளடக்கியது. வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்துவதன் மூலம், தற்போதைய சந்தை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் அரசாங்கம் விதிகளை சரிசெய்து வருவதாகத் தெரிகிறது.

அதேசமயம், ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிமாற்றங்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என்றும், அதற்கு பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் மற்ற அடையாள ஆவணங்களான ஆதார் போன்றவற்றை வழக்கம்போல சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. பரிவர்த்தனைகளை PAN உடன் தெளிவாக இணைப்பது சொத்து பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் எதிர்காலத்தில் வரி ஆய்வுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இந்த புதிய விதியின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139A-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு பான் கார்டு இல்லாதவர்கள் தங்களது விவரங்களை உறுதிப்படுத்த படிவம் 60-ஐ சமர்ப்பிக்கும் நடைமுறை உள்ள நிலையில், தற்போதைய புதிய உச்சவரம்பு அறிவிப்பு அத்தகைய கூடுதல் ஆவணப் பணிகளை பெருமளவு குறைக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகள் முறையாக செய்யப்படுகிறா என்பதை கண்காணிக்கவும் பான் கார்டு முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது சிறிய அளவிலான பரிமாற்றங்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த புதிய உச்சவரம்பு அறிவிப்பின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் சிறிய அளவிலான முதலீடுகள் மற்றும் நில விற்பனைகள் விரைவில் அதிகளவில் வளர்ச்சியடையும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த புதிய சலுகையைப் பயன்படுத்தி மக்கள் வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவை எவ்வித கூடுதல் ஆவணச் சிக்கல்களும் இன்றி நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதால், இனிவரும் நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரூ.20 லட்சத்திற்கு உட்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும்போது பான்கார்டு கேட்கப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சொத்து வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்..! 6% வரி உயர்வு தற்காலிக நிறுத்தம்..!
property registration pan card

மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்பட்டால்,திருத்தப்பட்ட வரம்பு சிறிய சொத்து பரிவர்த்தனைகளுக்கான இணக்கத்தை எளிதாக்கும், அதே நேரத்தில் அதிக மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு கடுமையான அறிக்கையிடலை வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com