இங்கிலாந்தில் வெடித்த போராட்டம்… 1000 பேர் கைது!

People Protest
People Protest
Published on

இங்கிலாந்தில் சில நாட்களாக கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது  போலீஸார் சுமார் 1000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த ஜூலை 29ம் தேதி டேன்ஸ் கிளாஸை முடித்து வந்த சிறுமிகள் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். மேலும் 10 சிறுமிகள் படுகாயமடைந்தனர். இது இங்கிலாந்து நாட்டையே கலங்கடித்தது.

இங்கிலாந்தில் குடிப்பெயர்ந்த குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த சம்பவத்தை செய்துள்ளனர் என்று வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இதனால், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லாது, இந்தியா உட்பட பிற நாட்டையும் மதங்களையும் சார்ந்தவர்கள் மீது இனவெறி கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதனால் இங்கிலாந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 

இதனையடுத்து சிறுமிகளை தாக்கிய 17 வயதுடைய வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருந்தாலும் வன்முறை நீடித்து வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார்.  இருப்பினும் அந்த நாட்டின் வலதுசாரி அமைப்பினர் யார் பேச்சையும் கேட்காமல் தீவிரமாக இரண்டு வாரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் தற்போது இந்த போராட்டத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இருப்பினும், போராட்டம் செய்தவர்கள் சமூக வலைதளங்களில் இனவெறி கருத்துக்களைப் பகிர்ந்து மக்களிடையே போராட்டத்திற்கான ஆதரவை பெற்று வந்தனர். அதாவது அந்த நாட்டில் குடிபெயர்ந்தவர்கள்,  ஆசியர்கள்,  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரப்பப்பட்டது. 

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 3 - அமெரிக்க அதிபர், மக்களால் 'கிட்டத்தட்ட' நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்! அதென்ன கிட்டத்தட்ட…?
People Protest

இதனால், இந்த கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் சுமார் 575 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக இங்கிலாந்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சிறுமிகளின் கொலை வழக்கு குறித்தான எந்த ஒரு காரணமும் வெளிவரவில்லை. விசாரணை மட்டுமே நடந்துக்கொண்டு வருகிறது. இது போராட்டக்காரர்களுக்கு ஒரு ப்ளஸாக அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com