PSLV C-62 ராக்கெட் தோல்வி: பசிபிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்..!

pslv c 62
pslv c 62source: www.mathrubhumi.com
Published on

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்,இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-என்1 செயற்கைக்கோள் இருந்தது. மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 17 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டிருந்தது.காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக்கோளுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 ராக்கெட், 8-வது நிமிடத்தில் தனது பாதையில் இருந்து விலகிக் சென்றது.இந்த ராக்கெட் கடைசி நேரத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால், அதில் இருந்த 16 செயற்கைக்கோள்களின் நிலை கேள்விக்குறியானது.

பிரதான செயற்கைக்கோளான இஓஎஸ்-என்1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புறப்பட்ட 8-வது நிமிடத்தில் ராக்கெட்டின் 3-வது நிலையில் (பி.எஸ்.3) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உந்து விசை குறைந்ததால், குறிப்பிட்ட பாதையில் இருந்து ராக்கெட் விலகிச் சென்றது.ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு பகுதிக்குள்ளேயே இருந்ததால், அனைத்தும் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது. திட்டமும் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 2-வது தோல்வி இதுவாகும்.

இதையும் படியுங்கள்:
ஏன் தாமதமாக வந்தீர்கள்? பேச்சை ஏன் நிறுத்தவில்லை? - சி.பி.ஐ-யின் 3 கேள்விகளால் திணறிய விஜய்!
pslv c 62

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com