தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அரசு ஏற்பாடு!

Psychiatric counseling
Psychiatric counseling

2023 - 2024ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநல அலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46,932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தாண்டும் (2023 - 2024) 7,60,606 மாணவர்கள் 12ம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதியுள்ளனர்.இதில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்களுக்கு (32164 ஆண்கள் மற்றும் 19755 பெண்கள்) மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இந்தச் சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மன நல ஆலோசகர்கள் 3 சுழற்சிமுறையில் செயல்படுவர்.

‘104’ தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ் வளாகம் 30 மன நல ஆலோசகர்களைக் கொண்டும், ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் மன நல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!
Psychiatric counseling

‘14416’ நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் சேவை மையமானது அரசு மன நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னையில் 10 இருக்கைகளுடன் 30 மன நல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது.

மேலும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மன நல உளவியலாளர்கள், மன நல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்திருந்து விடுபட்டு நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் ‘104’ மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் ‘14416’ ஆகியவற்றை தொடர்பு கொண்டு பலன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com