#JUST IN : வாக்குச்சாவடியில் பாஜக, காங் கைகலப்பு - போலீஸ் தடியடி நடத்தியதால் புதுச்சேரியில் பரபரப்பு!

Puducherry elections
Puducherry elections images: Deccan Chronicle
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று காலையில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மண்ணடிபட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கானூர் பகுதியில் அரசுமேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாக்குப்பதிவு நடைபெறும்போதே , வாக்குச்சாவடிக்குள்  நுழைந்து பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த வாக்குவாதம் முற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி , இரு தரப்புகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் திருக்கானூர் வாக்குச்சாவடிக்குள் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக திருக்கானூர் பகுதிக்கு விரைந்து, வாக்குச்சாவடி அருகில் கைக்கலப்பில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அவர்கள் போலீசாரின் அறிவுரையை கேட்கவில்லை. மேலும் , கூட்டமும் கட்டுப்படுத்த முடியாத அளவில் கூடிக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த போலீஸ்காரர்கள் உடனடியாக தடியடி நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் சிறிது நேரம் திருக்கானூர் வாக்கு சாவடியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தோல் மற்றும் காலணி பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.!
Puducherry elections
logo
Kalki Online
kalkionline.com