#BREAKING: தோல் மற்றும் காலணி பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.!

Tamilnadu
Tamilnadu
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தோல் மற்றும் காலணி பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் 2 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தோல் மற்றும் காலணி பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாட்டின் பங்கு 38% ஆகும். அதோபோல், தோல் பொருட்களை ஏற்றுமதி செயவதில் தமிழ்நாட்டின் பங்கு 47% ஆகும்.

இந்திய அளவில் தோல் பொருட்களின் முக்கிய தலைநகராக தமிழ்நாடு விளங்குவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த சாதனை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் உயர்த்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: நாங்கள் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும்?பாஜக தேசிய தலைவர் பரபரப்பு கருத்து..!
Tamilnadu

சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் தோல் மற்றும் காலணி பொருட்களின் மிக முக்கியமான ஏற்றுமதி மையங்களாக இருக்கின்றன.

அடிடாஸ், பூமா மற்றும் நைக் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு தேவையான தயாரிப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தோல் பொருள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "தமிழநாட்டில் காங்கிரஸ் எங்கேயும் கிடையாது" நயினார் நாகேந்திரன் அதிரடி.!
Tamilnadu
logo
Kalki Online
kalkionline.com