புதுக்கோட்டையில் அரசு பேருந்து கதவு திடீரென திறந்து விபத்து!: 10 பள்ளி மாணவர்கள் காயம்..!

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென திறந்ததால் கீழே விழுந்து 10 பழங்குடியின பள்ளி மாணவ- மாணவிகள் காயம்..!
bus accident
bus accidentsource:vikatan
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

புதுக்கோட்டையில் அரசு பேருந்து தானியங்கி கதவில் சிக்கி மற்றும் பேருந்து கதவு திடீரென திறந்ததால் கீழே விழுந்து பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டு மற்றும் கதவு அருகே மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநர் தானியங்கி கதவை திடீரென திறந்ததால் அல்லது கதவு திடீரென திறந்து கொண்டதால் மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பல மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் 8 முதல் 10 பழங்குடியினப் பள்ளி மாணவிகள் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த உடன் அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மாணவர்களை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பேருந்து ஓட்டுனரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உளளனர். மேலும் நடத்துனர் மாணவிகளை பேருந்தில் இருந்து தள்ளி விட்டதாகவும் சில தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ரெங்கம்மாள் சத்திரம் அருகே கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற தடம் எண் 8 அரசு நகரப் பேருந்து வந்துள்ளது. அதில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதற்காக இந்த நகர அரசு பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் ஏறியுள்ளனர். அப்போது கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறி அந்த மாணவர்களை நடத்துனரும் பேருந்தில் இருந்தவர்களும் கீழே இறங்கச் சொல்லியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடத்துனர் அந்த மாணவர்களை வலுக்கட்டயமாக கீழே இறக்க கதவைத் திறந்ததாகவும் அப்போது மாணவர்கள் வரிசையாக கீழே சரிந்து விழுந்ததாகவுமா கூறப்படுகிறது. இதில் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பேருந்தில் திடீரென கதவைத் திறந்ததால் தான் பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களை இறக்கி விடும் நோக்கத்தில் திடீரென ஓட்டுனர் கதவைத் திறந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, அதாவது மாணவர்கள் காயம் அடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவறி விழுந்த 10 பழங்குடியின மாணவிகள் காயமடைந்து வலியில் துடித்ததால் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்திற்குப் பேருந்து ஓட்டுனரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தான் முதல் தலைமுறையாக அரசு பள்ளிகளிலும், புதுக்கோட்டையில் உள்ள கல்லூரிகளிலும் கல்வி பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் நகரப் பேருந்தில் காலை நேரங்களில் எப்போதும் பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வழித்தடத்தில் நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை மிக குறைவாக இயங்குவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சொத்துக்காக மட்டுமே பாசமா? பெற்றோரை கவனிக்காத மகனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
bus accident
logo
Kalki Online
kalkionline.com