Puravi edukum festival
Puravi edukum festival

புரவி எடுக்கும் திருவிழா!

Published on

- தா.சரவணா

தமிழகத்தில் மே மாதம் கத்தரி வெயில் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்தாலும், நம் முன்னோர்கள், கோடையில் தங்களின் உறவுகள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருக்க திருவிழாக்களை இந்த காலகட்டத்தில் கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா தனியா மங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோயிலில் புரவி எடுக்கும் திருவிழா மிக பிரசித்தம். இங்குள்ள அய்யனார் சுவாமி, இங்கு வசித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் குலதெய்வமாக அருள் பாலிக்கிறார். இந்தப் பகுதியைச் சேர்ந்த படித்த பலரும் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் இவர்கள் அய்யனாரிடம் வேண்டிக் கொண்டுதான் விமானம் ஏறுகின்றனர். அப்படி செய்தால் குலம் காக்கும் அய்யனார், தங்களையும் காப்பார் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி… ஒரு நாள் முழுவதும் தியானம்!
Puravi edukum festival

இப்படிப்பட்ட கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் புரவி எடுக்கும் திருவிழா வெகு பிரசித்தம். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள், புரவி சிலை எடுத்து அதை குடும்பத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து, அய்யனாரிடம் ஒப்படைத்துச் செல்வர். இப்படியாக ஆண்டுக்கு 50 முதல் 70 புரவிகள் கோயிலுக்கு வந்த சேரும். இப்படியாக இங்கு வரும் ஒவ்வொரு புரவிக்கு பின்னரும் ஒரு வேண்டுதல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாட்கள் நடக்கும் இந்தத் புரவி திருவிழாவில் உற்றார் உறவினர்களைப் பார்ப்பது ஒரு புறம் என்றால், வெளிநாட்டு வேலைக்குச் சென்றவர்களும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள விடுமுறை எடுத்து வந்து விடுவார்கள். மொத்தத்தில் தனியாமங்கலம் ஸ்ரீ அய்யனார் கோயில் புரவி எடுக்கும் திருவிழா, பல புதிய சொந்தங்களையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com