போக்குவரத்துக்கு துறையில் 600 புதிய பஸ்களை கொள்முதல்!

போக்குவரத்துக்கு துறையில் 600 புதிய பஸ்களை கொள்முதல்!

தமிழக மக்களுக்கு தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துக்கு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் புதிய பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது தமிழக அரசின் போக்குவரத்துக்கு துறை.

தமிழ்நாட்டில் தற்போது 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் வேளையில் அதில் இயங்கும் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. இதன் காரணமாக தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும்.

புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தரமான போக்குவரத்து மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com