இன்று விண்ணில் பாயும் GSLV – F14 விண்கலத்தின் நோக்கம் இதுதானா?

GSLV – F14
GSLV – F14

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV – F14 விண்கலம் இன்று மாலை 5.30 மணியளவில் விண்ணில் பாய உள்ளது.

GSLV – F14 விண்கலம் மூலம் இன்சாட் – 3டிஎஸ் செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் விண்ணில் பாய்வதற்கான நோக்கம் என்னவென்றால், இது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவித்துவிடும். அந்தவகையில் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த இன்சாட் – 3 டிஎஸ் செயற்கோள் இன்று மாலை 5.30 மணி அளவில் விண்ணில் பாய உள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் பாயவுள்ள இந்த விண்கலத்திற்கான கவுன்ட் டவுன் 27.5 ஆக நேற்று பிற்பகல் 2.5 மணிக்கு தொடங்கியது.

இதற்கான முழுச் செலவையும் பூமி அறிவியல் அமைச்சகம் ஏற்றுள்ளது. மேலும் இதுத்தொடர்பான நேரலையை மாலை 5 மணியிலிருந்து இஸ்ரோ யூட்யூப் பக்கத்தில் பார்க்கலாம்.

இந்த ராக்கெட் 420 டன் எடைக்கொண்டுள்ளது. மேலும் இந்த விண்கலம் 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. இதன் முதல் நிலையில் 139 டன் உந்துசக்தியைக் கொண்ட உந்து சக்தி மோட்டார் உள்ளது. 2 வது நிலையில் 40 டன் உந்து சக்திக் கொண்ட எந்திரம் உள்ளது. மூன்றாவது நிலையில்15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட கிரையொஜெனிக் நிலையாகும்.

மேலும் INSAT – 3DS என்பது வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கைகளைத் தெரிவிக்கும் செயற்கைகோள் ஆகும். இது புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விடுதலை!
GSLV – F14

இஸ்ரோவின் கூற்றுப்படி, இந்த 3டிஎஸ் என்பது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்த உதவும் ஒன்று. இந்த செயற்கைகோளின் மொத்த எடையானது 2,275 கிலோகிராம் ஆகும். இந்திய தொழில்துறை நிறுவனங்கள் இந்த INSAT 3DS வடிவமைப்பில் பெரிய பங்கு அளித்துள்ளது. மேலும் இந்த செயற்கைகோள் கடலின் முழு பரப்பை கண்காணிக்கவும் உதவும். இதில் 6 சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் பேலோடுகள் (Palod) உள்ளன. ஒரு பேலோடு, உதவி தேடலுக்கும் மற்றும் இரண்டாவது பேலோடு மீட்புக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com