ஐந்தாவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்ற புதின்! மக்களின் தொடர் ஆதரவுக்கு காரணம் என்ன?

Vladimir Putin
Vladimir Putin

தீவிரமான உக்ரைன் போர் இன்னும் ஓயாத நேரத்தில் மீண்டும் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதின், என்னதான் தனது தலைமையைச் சுற்றி சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரஷ்யாவில் பரவலான ஆதரவை தொடர்ந்து அனுபவித்து வருகிறார். இந்த நீடித்த தலைமையின் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னவாக இருக்கும்?

விளாடிமிர் புதின்: KGB டு Kremlin

ரஷ்யாவின் அப்போதைய லெனின்கிராட்(Leningrad) (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) என்ற இடத்தில் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பனிப்போரின் நிழலில் இருந்து விளாடிமிர் விளாடிமிரோவிச் புதின் பிறந்தார். CIA க்கு போட்டியாக இருந்த பிரபல உளவு அமைப்பான சோவியத் கால KGBயில் அவரது பயணம் தொடங்கியது.

இருண்ட சந்துகள், நீளமான கோட்டுடன்(trench coats) மற்றும் கிசுகிசுக்கப்பட்ட ரகசியங்களை பரிமாறிக்கொள்ளும் இடங்களை கற்பனை செய்து பாருங்கள் அது தான் KGB இன் வாழ்க்கை சூழலே . புதின் அங்கு 15 ஆண்டுகள் கழித்தார், உளவு மற்றும் சூழ்ச்சியில் தனது திறமைகளை மெருகேற்றி கொண்டார்.

தி ரைஸ் டு பவர்(The Rise to Power)

1990 களில் சோவியத் யூனியன் சிதைந்தது. ரஷ்யாவில் குழப்பம். என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தது. அந்த காலகட்டத்தில் தான் அரசியல் மேடையில் அடியெடுத்து வைத்தார் புதின். அவர் 1999 முதல் 2000 வரையிலும், மீண்டும் 2008 முதல் 2012 வரையிலும் பிரதமராக பணியாற்றினார்.

ஆனால் அவரது ஜனாதிபதி பதவி தான் அவரின் உண்மையான ஆளுமை திறனை வெளிப்படுத்தியது. 2000 முதல் 2008 வரை மற்றும் 2012 முதல் இப்போது வரை, ரஷ்யாவின் விதியை தன் இரும்புப் பிடியில் வைத்து, புதின் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.

புதின் ஆளுமை:

அவரது கம்பிரமான பார்வை வசீகரமானது, ஜூடோ கருப்பு பெல்ட்கள் மற்றும் அவரது ஆரம்பகால குதிரை சவாரி ஆகியவை ரொம்பவே பிரபலமானவை. ஆனால் அப்படிப்பட்ட  ஒரு பாத்திரத்திற்கு பின்னால் அதீத  திறமைசாலி  இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. 

முதலில் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவின் வலிமையை மீட்டெடுக்கும் நோக்கத்தில், பல ராணுவ உள்கட்டமைப்புகளை அவர் தொடங்கி இப்போது வரை உலக அரங்கில் ஒரு வலிமையான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் புதின்.

இதையும் படியுங்கள்:
தீமையை நன்மையாக்கிய இந்தியன்! என்ன நன்மை? யார் இவர்?
Vladimir Putin

சர்ச்சைகள்:

புதினின் பதவி காலங்கள் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. விமர்சகர்களின் கருத்து சுதந்திரங்கள் முடக்கப்படுவதிலிருந்து, அரசியல் அடக்குமுறை மற்றும் தேர்தல் முறைகேடுகள் வரை கூறிக்கொண்டே போகலாம். இருந்தாலும் கூட, அவரது புகழ் பல ரஷ்யர்களிடையே நீடித்துக் கொண்டிருக்கிறது, காரணம் அவர்கள் அவரை ஒரு நம்பிக்கையின் சக்தியாகக் கருதுகின்றனர். யார் அவரைப் பாராட்டினாலும் அல்லது கேள்வி எழுப்பினாலும், புதினின் பயணம் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

அசைக்க முடியாத பலம் மற்றும் தேசியவாதம்:

புதின் ரஷ்ய வலிமையை உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவர் பதவியில் இருந்த காலம் முழுவதும், ரஷ்யர்களுக்கு தேவையான விஷயங்களை நிவர்த்தி செய்வதில் அவர் முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். மொத்த நாட்டின் ஒருமைப்பாடு, சர்வதேச உறவுகளில் நாட்டின் செல்வாக்கை உயர்த்தியது மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாங்கும் திறன், (குறிப்பாக அமெரிக்காவில் இருந்து) என்று இவருடைய பலன்கள் பல.

பொருளாதார நலன்கள் மற்றும் ஆதரவு:

ரஷ்ய தன்னலக்குழுக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புதினுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர். காரணம், புதின் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் அவர்கள் செல்வத்தையும் அந்தஸ்தையும் இழக்க நேரிடும். இது போன்ற கூட்டமைப்புகள் அவரது ஆட்சிக்கு பெரிய ஆதரவை உறுதி செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com