மோடியை பாராட்டிய புதின். ஏன் தெரியுமா? 

Putin praised Modi.
Putin praised Modi.

இந்திய நாட்டு மக்களின் நலனுக்கு எதிரான எந்த முடிவுக்கும் மோடியை பணிய வைக்க முடியாது என ரஷ்ய அதிபர் பாராட்டியுள்ளார். 

பல காலமாகவே ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. அதேபோல ரஷ்யாவுக்கு எதிரான எவ்வித நிலைப்பாட்டையும் இந்தியா எதிர்க்காமல் புறக்கணித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போரிலும் அவர்களுக்கு எதிராக இந்தியா எவ்விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா உள்பட பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வந்தாலும், இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை காத்தது. 

இதையும் படியுங்கள்:
பேய் ரயிலில் பயணிக்கும் ரஷ்ய அதிபர் புதின்.
Putin praised Modi.

அதேவேளையில் சமீப காலமாக சீனாவுடன் ரஷ்யா நெருக்கமாக இருந்தாலும், இந்தியாவுடன் நட்பு அவர்களுக்கு முக்கியம் என்பதை பல வழிகளில் பிரதிபலித்து வருகின்றனர். இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ரஷ்ய அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், 

இந்திய நாட்டு நலனுக்கு எதிராக எந்த முடிவை எடுக்குமாறும் மோடியை மிரட்டவோ, அச்சுறுத்தவோ என்னால் முடியும் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மோடிக்கு எதிராக பல அழுத்தங்கள் உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தேசத்தின் நலனுக்காக மோடி எடுக்கும் சில கடுமையான நிலைப்பாடு என்னை வியக்கச் செய்கிறது. ரஷ்யா - இந்தியா இடையேயான உறவு எல்லா விதங்களிலும் மேம்பட்டு வருவதற்கு மோடியின் தைரியமான மனப்பான்மையே காரணம்” என அவர் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைமை தாங்கி நடத்திய ஜி20 மாநாடு சிறப்பான முறையில் நடந்து, நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டதை, ரஷ்ய செய்தி தொடர்பாளர் பாராட்டி பேசி இருந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி அதிபர் புதின் நேரடியாக இப்படி புகழாரம் சூட்டியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com