உலகின் சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு!

Aeroplane
Aeroplane
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலகின் மிகசிறந்த விமான நிறுவனமான தொடர்ந்து 7-வது முறையாக கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்த்த ஸ்கை ட்ராக்ஸ் விமான சேவை ஆய்வு நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் சிறந்த விமான நிறுவனத்தை தேர்வு செய்து விருது அளிக்கிறது. விமான சேவை துறையின் ஆஸ்கர் பரிசு என்று ஸ்கை ட்ராக்ஸ் விருது புகழப்படுவது குறிப்பிடத்தக்கது. -இதுகுறித்து ஸ்கை ட்ராக்ஸ் விமான சேவை ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது:

எங்கள் நிறுவனம் சுமார் 100 நாடுகளை சேர்ந்த 1.4 கோடி விமான பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தியதில், தொடர்ந்து 7-வது முறையாக கத்தார் ஏர்வேஸ் சிறந்த விமான நிறுவனமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் ஏர்லைன்ஸ் ரேட்டிங் என்ற ஆய்வு நிறுவனம் 2022-ன் சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விஸ்தாரா ஏர்வேஸ் நிறுவனம் 20-வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com