குட் நியூஸ்.! பாதியாக குறையப் போகும் RAC டிக்கெட் கட்டணம்.!

RAC Ticket spare reduce
RAC Ticket
Published on

பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். சில சமயங்களில் டிக்கெட் கிடைத்தால் போதும் என்று, RAC டிக்கெட்டில் கூட நிறைய பயணிகள் பயணம் செய்கின்றனர்.

பொதுவாக விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது RAC என்ற வசதி இருக்கும். இந்த RAC டிக்கெட் இரண்டு பேருக்கு ஒதுக்கப்படும். இரண்டு பயணிகளுக்கும் பகுதியளவு இருக்கையை இந்த டிக்கெட் உறுதி செய்யும். ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர், அதனை கேன்சல் செய்யும்போது காத்திருப்பில் உள்ள இருவருக்கு அந்த ஒரு இடம், RAC டிக்கெட்டாக வழங்கப்படும்.

ஆர்ஏசி டிக்கெட்டில் ஒரே பெர்த்தில் இரண்டு பயணிகள் பயணம் செய்தாலும், இருவரும் முழுத் தொகையை செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் ஒரே பெர்த்தில் இருவர் பயணிக்கும் போது, ஏன் இரு பயணிகளும் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கேள்வியெழுப்பி உள்ளது.

மேலும் இருவரிடமும் பாதி அளவு கட்டணங்களை வசூலிப்பதே நியாயம் என்றும் ரயில்வே துறைக்கு பொது கணக்குக் குழு அறிவுரைத்துள்ளது.

RAC இருக்கை என்பது 2 பயணிகளுக்கு ஒதுக்கப்படுவதால், பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு பயணிக்கலாம். இரவு நேரத்தில் இருவருமே தங்கள் கால்களை எதிரெதிரே நீட்டிக்கொண்டு உறங்கலாம்.

பக்கவாட்டு மேல் இருக்கையில் கன்ஃபார்ம் டிக்கெட்டில் வரும் பயணி, பகல் நேரத்தில் RAC இருக்கையில் வந்து அமரலாம். ஆனால், இரவு உறங்கும் நேரம் வந்ததும், அவர் தன்னுடைய மேல் இருக்கைக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் அவரை எழுப்பும் உரிமை RAC பயணிகளுக்கு இருக்கிறது.

ரயில்வே விதிகளின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை RAC இருக்கையின் மேல் இருக்கையில் பயணிப்பவர் உட்கார அனுமதி இல்லை. ஒருவேளை அவர் கீழ் இருக்கையில் அமர விரும்பினால், நாம் சிறிதும் தயக்கமின்றி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம்.

இந்நிலையில் RAC பயணிகளிடம் பாதி அளவு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “படுக்கை வசதிக்காக ஒரு பயணி கட்டணம் செலுத்தும் நிலையில், அவருக்கு அமர்வதற்கான RAC இருக்கை மட்டுமே கிடைப்பதால், முழு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை ரயில்வே துறை திருப்பித் தர வேண்டும்.

ஒரே பெர்த்தில் இருவர் அமரும் போது அவர்கள் ஏன் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது நியாயமற்றது. இருவரும் பாதி அளவு கட்டணத்தை செலுத்தும் போது ஒரு பெர்த்துக்கான கட்டணம் ரயில்வேக்கு கிடைத்து விடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள்:
ரயில் டிக்கெட்டை தொலைத்து விட்டால் இதைச் செய்யுங்க..! பிரச்சினையே வராது..!
RAC Ticket spare reduce

ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கைகளின் அளவைப் பொறுத்து 12 முதல் 14 ஆர்ஏசி டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். ஏசி பெட்டிகளில் ஒதுக்கப்படும் ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு இதற்கு முன்பு வரை போர்வைகள் வழங்கப்பட்டதில்லை. ஆனால் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சமீபத்தில் ஆர்ஏசி பயணிகளுக்கும் கம்பளிப் போர்வைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் அறிமுகமான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் இந்த RAC வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு வழங்கிய அறிவுறுத்தலை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டால், வெகுவிரைவில் RAC டிக்கெட் கட்டணம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! கூட்ட நெரிசலைத் தவிர்க்க புது திட்டம்..!
RAC Ticket spare reduce

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com