2025 ஆம் ஆண்டின் Word of the year இது தான்..! `இது வெறும் சொல் அல்ல'...!

social media
social media
Published on

2025 ஆம் ஆண்டிற்கான 'Word of the Year' வெவ்வேறு அகராதிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அகராதியும் அந்த ஆண்டின் கலாச்சாரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தையை தேர்வு செய்கிறது.

Oxford Dictionary: Rage bait. இது கோபம் அல்லது சீற்றத்தை தூண்டும் வகையில் வேண்டுமென்றே ஆன்லைனில் பகிரப்படும் உள்ளடக்கத்தை குறிக்கிறது.

2025 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரேஜ் பெய்ட்(Rage Bait) என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ஒரு சிறந்த வார்த்தையை தேர்வு செய்து அதனை அந்த ஆண்டினுடைய வார்த்தையாக அறிவிப்பது வழக்கம்.

மக்களுடைய கோபத்தைத் தூண்டும் வகையில் பதிவுகள், வீடியோக்கள், ரீல்ஸ்கள் போன்றவற்றை அதிகமாக பதிவிட்டு லைக்குகள் வாங்குவதுதான் இப்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. அப்படி வரும் ஒன்று நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருந்தால், அதனைப் பார்ப்பவர்கள் அதிகம் கோபப்பட்டு கருத்துக்களை போடுவார்கள். இதன் மூலம் அந்த வீடியோ அல்லது ரீல்ஸ்கள் அதிகமாக ரீச் ஆகும். இப்படி ஆன்லைனில் ஒன்றை பார்க்கும் பொழுது அல்லது படிக்கும் பொழுது, வேண்டுமென்றே நம்மை கோபப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது போல தோன்றியிருந்தால் அந்த உணர்வை வெளிப்படுத்துவது தான் ரேஜ் பெய்ட் எனப்படும்.

இப்படி ரேஜ் பெய்ட் என்ற வார்த்தையின் பயன்பாடு இணையதளத்தில் இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற வாக்கெடுப்பில் 30,000 திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். அதற்குப் பிறகுதான் 2025 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸ்போர்ட் வார்த்தையாக ரேஜ் பெய்ட்டை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்ட் அகராதி இந்த ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக Rage Bait என்ற வார்த்தையைத் தேர்வு செய்ததுபோல, காலின்ஸ் அகராதி AI உதவியுடன் கம்ப்யூட்டர் கோட் எழுதும் "வைப் கோடிங்" (Vibe Coding) என்ற வார்த்தையையும், கேம்பிரிட்ஜ் அகராதி தெரியாத பிரபலங்களுடன் ஆன்லைனில் ஒருதலைப்பட்ச நட்பு வைத்துக்கொள்ளும் "பாராசோஷியல்" (Parasocial) என்ற வார்த்தையையும் தேர்ந்தெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
போனில் 'ஹலோ' சொன்னா பேங்க் அக்கவுண்ட் காலியாகுமா? உஷார் ரிப்போர்ட்!
social media

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com