#BREAKING : சென்னையில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி..!

Rahul gandhi priyanka gandhi
Rahul gandhi priyanka gandhi
Updated on

புதுச்சேரியில் பரப்புரை செய்வதற்காக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

பகல் 1 மணிக்கு புதுச்சேரி மீன் அங்காடி அருகே உள்ள திடலில் காங்கிரஸ் சார்பில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ராகுல் காந்தி  அங்குள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் புதுச்சேரியில் இருந்து கேரளா பாலக்கோடு சென்று அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தி தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கேரள மாநிலம் சென்று கண்ணூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இன்று பிற்பகல் 3 மணி தான் கெடு! - தமிழக தேர்தல் களத்தில் கடைசி நிமிடப் பரபரப்பு..!
Rahul gandhi priyanka gandhi
logo
Kalki Online
kalkionline.com