100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தருவதாக ராகுல் உறுதி!

Rahul Gandhi
Rahul Gandhi
Published on

வயநாடு நிலச்சரிவில் பெரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

ராகுல்காந்தி இரண்டுமுறை இதுவரை வயநாடு தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவின் கோரமான நிலைமை குறித்து கேள்விப்பட்ட ராகுல்காந்தி அவ்விடத்திற்கு விரைந்து மேற்பார்வையில் ஈடுபட்டார். அந்தவகையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக கேரளா அரசிடமும் மத்திய அரசிடமும் பேசப்போவதாக கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “ஆகஸ்ட் 1 முதல் நான் இங்கு இருக்கிறேன். இது ஒரு பயங்கரமான சோகம். பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் முகாம்களுக்கும் சென்றோம். அதன்பின்னர் நேற்றுப் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிக்கிறது.” என்று பேசினார்.

மேலும் அவர், “ கேரளாவில் இதுபோல ஒரு சோகம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்பதால், வித்தியாசமாகவே அணுக வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதல்வரிடமும் வலியுறுத்த உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம். இப்போதைக்கு நமது முதன்மை பணி, தேடுதல்தான்.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் 14 வருடங்களில் இல்லாத அளவு கனமழை… 10 பேர் பலி!
Rahul Gandhi

இன்னும் உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா என்பதை தீவிரமாகத் தேட வேண்டும். முகாம்களில் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கே செல்ல வலியுறுத்தக்கூடாது. இது குறித்தும் கேரள அரசிடம் வலியுறுத்த உள்ளேன்.” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com