அஸ்ஸாம் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

அஸ்ஸாம் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

ஸ்ஸாமின் சமூக சீர்திருத்தவாதியான துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்வரா தன் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ராகுல்காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கோயிலுக்கு 20 கி.மீ. முன்னதாகவே, அதாவது ஹைபோராகான் என்னுமிடத்திலேயே ராகுல்காந்தியும் காங்கிரஸ் தொண்டர்களும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

திங்கள்கிழமை பாரத் ஜடோ நியாய யாத்திரை தொடங்கும் முன்னர் அந்த கோவிலுக்குச் செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், பின்னர் மறுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தன்னை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் கேட்டு புகாப்பு அதிகாரிகளிடம் ராகுல் வாக்குவாதம் செய்யும் விடியோவும் வெளியானது.

செய்தியாளர்களிடம் பேசிய காந்தி, "ஸ்ரீமந்தா சங்கர்தேவ் அஸ்ஸாமின் சிந்தனையை பிரதிபலித்தார்.  அவர் வழியில் நடக்க முயற்சிக்கும் போது அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். அவர் எங்களுக்கு ஒரு குரு போன்றவர். அதனால்தான் நான் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் அவர்களால் அழைக்கப்பட்டேன்.  ஆனால் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் காரணம் காட்டி (கோயிலுக்கு) செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கௌரவ் கோகோய் அங்கு செல்லலாம் என்பது விசித்திரமானது, ஆனால் எனக்கு அனுமதி இல்லை."

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "ராகுல் காந்தி அங்கு செல்ல விரும்பினார். ஜனவரி 11 முதல் நாங்கள் முயற்சித்து வருகிறோம், இதற்காக எங்கள் இரண்டு எம்எல்ஏக்கள் நிர்வாகத்தை சந்தித்தனர்" என்றார்.

"ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு அங்கே வருவோம் என்று சொன்னோம். வரவேற்போம் என்று சொன்னார்கள். இப்போது அனுமதி மறுக்கிறார்கள்.

"இது மாநில அரசின் அழுத்தம். நாங்கள் அங்கு செல்ல முயற்சிப்போம், ஆனால், மாலை 3 மணிக்குப் பிறகு அங்கு செல்வது மிகவும் கடினம், ஏனெனில் நாங்கள் இன்னும் பல கி.மீ. தூரத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்," என்று மூத்த காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஞாயிற்றுக்கிழமை, படத்ரவா தான் நிர்வாகக் குழு, ராகுல் காந்தி திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் பிறகு வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று கூறியது.

"ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மேலும் கோயில் வளாகத்துக்கு வெளியே பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ராகுல் காந்தி 3 மணிக்கு மேல் வருகை தரலாம் என்று கூறியது.

 இதனிடையே பாரத் ஜடோ நியாய யாத்திரையின் போது தலைவர்கள் சிலர் பாஜக ஆதரவாளர்களால்  தாக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. "ஜெய் ஸ்ரீ ராம்" மற்றும் "மோடி, மோடி" கோஷங்களை எழுப்பினர். ஆனால் காங்கிரஸ் கட்சி பிரதமரையோ அல்லது அஸ்ஸாம் முதலமைச்சரையோ கண்டு பயப்படுவதில்லை என்பதை யாத்திரையினர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ  சர்மா,  ஜனவரி 22 திங்கள்கிழமை ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ராவாவுக்குச் செல்வதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும்.  ஏனெனில் ஸ்ரீராமர் மற்றும் இடைக்காலத்தில் வந்த வைஷ்ணவ துறவிக்கும்  இடையில் எந்த போட்டியும் இருக்க முடியாது என்றார்.

இதையும் படியுங்கள்:
KGF இயக்குனருடன் கைக்கோர்க்கும் அஜித்குமார்? போடுங்கடா வெடிய!
அஸ்ஸாம் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளான திங்கள்கிழமை ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரை செல்லும் வழியில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சர்மா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com