ஸ்ரீராமருக்கு இணையாகவா ராகுல்?!

ராகுல் காந்தி - சல்மான் குர்ஷித்
ராகுல் காந்தி - சல்மான் குர்ஷித்
Published on

நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்திவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடவுள் ஸ்ரீராமருக்கு இணையாக ஒப்பிட்டு மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து கூறியிருந்தார். மேலும் ஒரு யோகியைப் போல ராகுல் தவம் செய்து வருவதாகவும் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பா.ஜா.க கொந்தளிப்பு:

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் ஜாமீனில் வெளிவந்த ஒருவரை கடவுளுடன் ஒப்பிட்டு பேசியது ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து சமூகத்தினரின் மனதையும் புண்படுத்தும்.

சல்மான் குர்ஷித்:

யாரும் கடவுளுக்கு மாற்றாக முடியாது. ஆனால், யார் வேண்டுமானாலும் அவர் காட்டிய வழியை பின்பற்றலாம். கடவுளை பின்பற்றி ராகுல் நடக்கிறார் என்று சொன்னால் அதற்கு ஏன் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது?

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டியா:

ராகுலுக்கு குடும்பத்தின் மீதுதான் பக்தி. கடவுள் மீதோ அல்லது இந்த நாட்டின் மீதோ அவருக்கு கொஞ்சம்கூட பக்தியில்லை

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்ஸாத் பூனாவாலா :

ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடப்பட்டதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சல்மான் குர்ஷித்:

நடுக்கும் குளிரில் நாம் எல்லோரும் குளிர் தாங்கும் ஜாக்கெட் அணிந்து செல்லும் நிலையில் ராகுல் காந்தி, வெறும் டீ ஷர்ட் அணிந்தபடி ஒற்றுமை யாத்திரையில் பயணிக்கிறார். ஒரு யோகியைப் போல் அவர் தவம் இருக்கிறார். கடவுளின் வழியில் செல்லும் அவரை புகழ்ந்து பேசுவதில் என்ன தவறு?

பா.ஜா.க பதிலடி:

ஸ்ரீராமர் இருந்தாரா? என ஆட்சியில் இருந்தபோது கேள்வி எழுப்பிய காங்கிரஸார், இப்போது ராகுலை கடவுளுடன் ஒப்பிட்டு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி காஸியாபாதில் உள்ள லோனி வழியாக உத்தரப் பிரதேசத்தில் நுழைய உள்ளது. பின்னர் பாக்பட், ஷாம்லி வழியாக ஹரியானாவை சென்றடைய உள்ளது.

கருத்துக்களும் கொந்தளிப்பும் தொடருமா ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com