டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ராகுல் காந்தி நோ பங்கேற்பு!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி-யான ராகுல்காந்தி டிசம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மட்டார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை வருகிற டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகார அமைச்சரவை குழு பரிசீலித்து வருகிறது. இந்த குளிர் கால கூட்டத்தொடர் சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் நடத்தப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் கட்டிடப் பணிகள் முழுமை பெறாததால், இந்த முறை பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திலேயே நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்டு வருவதால், இம்முறை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்ட தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக குளிர்கால கூட்டத் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் காரணமாக டிசம்பர் மா7-ம் தேதி முதல் நடத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com